Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

பா.ஜனதா பொய்களை சொல்லி அரசியல் நடத்துகிறது: ராகுல் காந்தி கடும் தாக்கு

Posted On : December 28, 2017

காங்கிரஸ் உண்மையின் பக்கம் இருக்கும் எனவும் பாரதிய ஜனதா பொய்களை சொல்லி அரசியல் நடத்துகிறது எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இன்று காங்கிரஸ் நிறுவன நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப் போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சிக்கு பாரம் பரியம் உண்டு. காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்றாலும் பாதிக்கப்பட்டாலும் ஒரு போதும் உண்மையில் இருந்து விலகிச் செல்லாது. பா.ஜனதா கட்சி இப்போது அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதே தாக்குதல் தொடுத்து இருக்கிறது. அரசியல் சட்டத்தையே குற்றம் சாட்டி இருக்கிறது.
ஆனால் அரசியல் சட்டத்தை காக்க வேண்டிய கடமை காங்கிரசுக்கு இருக்கிறது. எதிர்காலத்தில் ஒவ்வொருவரையும் காக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

அரசியல் லாபத்துக்காக பா.ஜனதா பொய் சொல்கிறது. ஏமாற்று அரசியல் நடத்துகிறது. ஆனால் காங்கிரசின் புகழ் பெற்ற வரலாற்றில் உண்மையை நம்பி வருகிறது. காங்கிரசின் தலையாய கொள்கையே வாய்மைதான். வாய்மையை வென்றெடுக்க தொடர்ந்து போராடுவோம். உண்மையில் இருந்து ஒரு போதும் விலகிச் செல்லமாட்டோம்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Comments

தொடர்புடைய செய்திகள்