Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

அமெரிக்கா: கொள்ளையர்கள் சுட்டதில் இந்திய வாலிபர் உள்பட இருவர் பலி

Posted On : December 29, 2017

அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் உள்ள கேஸ் ஸ்டேஷனில் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் குஜராத்தை சேர்ந்த வாலிபர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.நியூயார்க்:

அமெரிக்காவின் சிகாகோ மாநிலம் டால்டன் நகரத்தில் உள்ள கேஷ் ஸ்டேஷனில் நேற்று இரவு கொள்ளையர்கள் நுழைந்தனர். அங்கு கடை வைத்திருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பலியானவர்களில் 19 வயதான அர்ஷாத் வஹோரா என்பவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கொள்ளையர்களை தேடி வருவதாகவும், பலியான வஹோரா அங்குள்ள கடையில் பணிபுரிவதாகவும் டால்டன் போலீசார் தெரிவித்தனர்.

சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்துவதாக போலீசார் குறிப்பிட்டனர். ஆனால், தற்போது அங்கு கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments

தொடர்புடைய செய்திகள்