Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

கொல்லம்: குடித்த டீக்கு காசு கேட்ட டீ கடைக்காரர் குத்திக்கொலை

Posted On : December 29, 2017

கொல்லம் அருகே குடித்த டீக்கு காசு கேட்ட டீ கடைக்காரர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாஸ்தான்பேட்டை குரங்காட்டை சேர்ந்தவர் சுதீஷ் (வயது 44). இவர் அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த வர்க்கீஸ் சுப்பிரமணியம் (44) என்பவர் டீ மற்றும் டிபன் சாப்பிட்டு வந்தார்.

கடையில் டீ குடித்த வகையில் வர்க்கீஸ் சுப்பிரமணியம் ரூ.200 தரவேண்டும். பணம் கொடுக்காமல் அவர் காலம் கடத்தி வந்தார். நேற்று சுதீஷ், வர்க்கீஸ் சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்று டீ காசு கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வர்க்கீஸ் சுப்பிரமணியம் அருகில் கிடந்த கத்தியை எடுத்து டீ கடை உரிமையாளர் சுதீசை சரமாரியாக குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கொல்லம் நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே சுதீஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வர்க்கீஸ் சுப்பிரமணியத்தை கைது செய்தனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்