Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

கொளத்தூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.9½ லட்சம் கொள்ளை: பணம் நிரப்பும் ஊழியர் கைவரிசை

Posted On : December 29, 2017

பணம் நிரப்பும் ஊழியரே ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை கொள்ளையடித்து இருப்பது வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதவரம்:

சென்னை சேத்துப்பட்டு ஹாரிஸ்டன் சாலையில் வங்கி ஏ.டி.எம்.களுக்கு பணம் நிரப்பும் நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனம் சார்பில் கொளத்தூரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். ஒன்றில் கடந்த 18-ந்தேதி ரூ.9½ லட்சம் பணம் நிரப்பப்பட்டது. பின்னர் அந்த பணம் திடீரென காணாமல் போனது.

ஏ.டி.எம்.-ல் பணம் இல்லாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 18-ந்தேதி நிரப்பிய பணம் எப்படி உடனே காலியாகும் எனற சந்தேகம் தனியார் வங்கிக்கு ஏற்பட்டது.

இதுபற்றி பணம் நிரப்பும் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மேலாளர் சீனிவாசன் ராஜமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

ஏ.டி.எம்.-ல் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியினை போலீசார் ஆய்வு செய்தபோது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மணலியை சேர்ந்த குமார் ‘ரகசிய பின்’ எண்ணை கொண்டு நிரப்பிய பணத்தை மறுநாளே எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் குமாரை தேடி வருகிறார்கள்.

பணம் நிரப்பும் ஊழியரே ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை கொள்ளையடித்து இருப்பது வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Comments

தொடர்புடைய செய்திகள்