Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ அப்பல்லோவில் தான் எடுக்கப்பட்டதா? – சந்தேகம் எழுப்பும் ஆனந்தராஜ்

Posted On : December 29, 2017

ஜெயலலிதா சிகிச்சை பெறுவதுபோன்று வெளியிடப்பட்ட வீடியோவில் சந்தேகம் உள்ளதாகவும், அந்த வீடியோவின் உண்மை நிலையை கண்டறியவேண்டும் என்றும் நடிகர் ஆனந்தராஜ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கிய சமயத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பான வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த அந்த வீடியோவில், ஜெயலலிதா பழச்சாறு அருந்துவதுபோல் உள்ளது.

இந்த வீடியோ குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் ஆனந்தராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ ஆதாரத்தில் சந்தேகம் உள்ளது. அது மருத்துவமனையில் இருந்தபோதுதான் எடுக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம். அதன் மூல வீடியோவில் பதிவு செய்த தேதி இருக்கும். அந்த  வீடியோ எங்கே? தொழில்நுட்பம் தற்போது வளர்ந்துவிட்டது. எனவே, யாரும் ஏமாற்ற முடியாது.

ஜெயலலிதா தனக்கு பின்னால் இருப்பதை பார்ப்பதற்காக வீடியோ எடுத்ததாக சொல்கிறார்கள். அவர் அப்படி பார்க்க வேண்டும் என்றால் கண்ணாடியை வைத்து காட்டியிருக்கலாம். ஆடையைக் கூட சரிசெய்யாமல் வீடியோ எடுத்திருக்கிறார்கள். இந்த கோலத்தில் எடுத்த வீடியோவை உடனே பத்திரப்படுத்தி வைத்தது ஏன்? உடனடியாக அழித்திருக்க வேண்டாமா?

எனவே, அந்த வீடியோவின் உண்மை நிலையை கண்டறியவேண்டும். ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மையான விவரங்களை வெளிக்கொண்டு வரவேண்டும். அரசியலில் பற்று இல்லாத வகையில் பேசும் தினகரன் பின்னால் தொண்டர்கள் ஏன் செல்ல வேண்டும்?

இவ்வாறு அவர் கூறினார்.

Comments

தொடர்புடைய செய்திகள்