Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

ரஜினியின் அரசியல் வருகை குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் கருத்து

Posted On : December 29, 2017

அரசியலுக்கு வருவதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. யார் வந்தாலும் அவர்களது நிலைப்பாட்டில் வெற்றியடைந்தால் வெற்றி கிடைக்கும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறி உள்ளார்.

கோவை:

கோவையில் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார். அவரிடம் ரஜினி தனது அரசியல் பயணம் குறித்து 31-ந் தேதி அறிவிக்க இருப்பதாக கூறியிருக்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:-

அரசியலுக்கு வருவதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. யார் வந்தாலும் அவர்களது நிலைப்பாட்டில் வெற்றியடைந்தால் வெற்றி கிடைக்கும் என்றார்.

தொடர்ந்து அவரிடம், ரஜினி இன்று பேசும் போது சினிமாவில் மாற்றம் வரும். அதேபோல அரசியலிலும் விரைவில் மாற்றம் வரும் என பேசியிருக்கிறாரே? என கேட்டதற்கு, நடைமுறையில் எல்லாம் நடக்கட்டும். அதன் பிறகு பார்ப்போம் என்றார்.

Comments

தொடர்புடைய செய்திகள்