Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

ரூ.2,500 கோடி செலவில் அலகாபாத் கும்பமேளா: உ.பி. அரசு நிதி ஒதுக்கீடு

Posted On : December 29, 2017

2019-ல் கும்பமேளாவை சிறப்பாக நடத்துவதற்காக 2,500 கோடி ரூபாயை உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஒதுக்கீடு செய்துள்ளார்.

அலகாபாத்:

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கண்ணுக்குத் தெரியாத சரசுவதி ஆறும் ஒன்று சேரும் இடம் உள்ளது.

“திரிவேணி சங்கமம்“ என்று அழைக்கப்படும் அந்த பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை மகா கும்பமேளாவையும், 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை அர்த்த கும்பமேளாவையும் நடத்தி வருகிறார்கள்.

கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு அங்கு அர்த்த கும்பமேளா நடந்தது. 6 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற உள்ளது.

இந்த கும்பமேளாவுக்கு இன்னும் ஓராண்டு உள்ள போதிலும் உத்தரபிரதேச மாநில அரசு இப்போதே ஏற்பாடுகளை தொடங்கிவிட்டது. இதற்காக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

2019-ல் கும்பமேளாவை சிறப்பாக நடத்துவதற்காக 2,500 கோடி ரூபாயை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஒதுக்கீடு செய்துள்ளார். இதையடுத்து கும்பமேளாவுக்கான பணிகள் தொடங்கிவிட்டன. இதனால் திரிவேணி சங்கமம் பகுதி படகு இயக்குபவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கும்பமேளாவின் போது பல லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புதிதாக கரை அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

2013-ம் ஆண்டு கும்பமேளாவுக்கு ரூ.950 கோடி செலவிடப்பட்டது. தற்போது 2019-ம் ஆண்டு கும்பமேளாவுக்கு அதை விட சுமார் 3 மடங்கு பணத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கு சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்