Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

விபத்து-மின்சாரம் தாக்கி பலியான 15 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Posted On : December 29, 2017

உயிரிழந்த காவலர்கள் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வியாசர்பாடி காவல் நிலைய போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பொன்னுசாமி சாலை விபத்தில் உயிரிழந்தார்.

ஆவடி காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சவுரியப்பன் உடல்நலக் குறைவால் காலமானார். விருதுநகர் மாவட்டம், கூமாபட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த உமா மகேஷ்வரன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், தமிழ் பல்கலைக் கழக, காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கார்மேகம் உடல் நலக் குறைவால் காலமானார்.

திருவாரூர் மாவட்டம், தேவங்குடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் உடல்நலக் குறைவால் காலமானார். விழுப்புரம் மாவட்டம், வரஞ்சரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த வெங்கடேசன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கோவைப்புதூர், தமிழ் நாடு சிறப்பு காவல் படை-4 ஆம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த கதிரேசன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிவேல் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் கண்டமனூர் உள்வட்டம் பகுதியைச் சேர்ந்த முருகனின் மனைவி முனியம்மாள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மதுரை மாவட்டம், புதுசுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மாவட் டம், புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமனின் மனைவி ஆச்சி மற்றும் சண்முகத்தின் மனைவி சரிதா ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்கள்.

கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரைச் சேர்ந்த தங்கவேலின் மகன் சிவலிங்கம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கிண்டி, மடுவாங்கரையைச் சேர்ந்த பாஸ்கர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பெரிய சாமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மேற்கண்ட நிகழ்வுகளில் உயிரிழந்த காவலர்கள் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 15 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்