Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றிய விஷ்வநாதன் ஆனந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Posted On : December 30, 2017

சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை கைப்பற்றிய விஷ்வநாதன் ஆனந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:
உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனும், இந்திய வீரர் விஷ்வநாதன் ஆனந்தும் மோதினர்.
இந்த போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஷ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்ச்சென்றார்.
இந்நிலையில், பட்டம் வென்ற விஷ்வநாதன் ஆனந்துக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் பதிவு செய்துள்ள வாழ்த்து செய்தியில், “வாழ்த்துகள்! உங்களால் கஷ்டங்களை நன்கு சமாளிக்க முடியும் என்பதை மறுபடியும் நிரூபிக்கிறீர்கள். உங்கள் விடாமுயற்சி எங்களுக்கு ஊக்கமளித்தது. உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உங்கள் முன்மாதிரியான வெற்றியால் இந்தியா பெருமை அடைந்துள்ளது”. என கூறியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்