Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

காலால் வரையப்பட்ட மிகப்பெரிய ஓவியம் – ஐதராபாத் மாணவி கின்னஸ் சாதனை

Posted On : December 30, 2017

ஐதராபாத்தைச் சேர்ந்த மாணவி காலால் வரைந்த ஓவியம் உலகின் மிகப்பெரிய ஓவியம் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த ஜான்கவி மகந்தி என்ற கல்லூரி மாணவி காலால் ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவர். இவர் சமீபத்தில் 140 சதுர அடியில் வரைந்த ஓவியம் காலால் வரைந்த மிகப்பெரிய ஓவியம் என்ற உலக சாதனைப் படைத்துள்ளது.

இதற்கு முன் காலால் 100 சதுர அடியில் வரையப்பட்ட ஓவியத்தின் சாதனையை ஜான்கவி முறியடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை மூன்று கின்னஸ் அதிகாரிகள் நேரில் பார்த்தனர்.

ஜான்கவி நடனம் ஆடும் போது காலால் ஓவியம் வரையும் தனித்திறமை கொண்டவர். அவர் சமீபத்தில் நடனமாடி கொண்டே தாமரை மற்றும் மயில் வரைந்தார்.

 

Comments

தொடர்புடைய செய்திகள்