Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

Posted On : December 30, 2017

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,560-க்கு விற்பனையாகிறது.

சென்னை:

சில நாட்களாக தங்கம் விலை நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. கடந்த 21-ந்தேதி ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 936ஆக இருந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் நேற்று பவுன் ரூ.22 ஆயிரத்து 360-க்கு விற்றது.

இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 560 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.2,820-க்கு விற்கிறது.

தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளி கிலோவுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரம் ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.42-க்கு விற்கிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்