Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

நைஜீரியா சிறையில் இருந்து 4 இந்தியர்கள் விடுவிப்பு: சுஷ்மா சுவராஜ்

Posted On : December 30, 2017

நைஜீரியா சிறையில் இருந்த நான்கு இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.புதுடெல்லி:

நைஜீரியா சிறையில் இருந்த நான்கு இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகருக்கு சென்றபோது அங்குள்ள அதிகாரிகளால் சந்தேகத்தின் அடிப்படையில் இமாசல பிரதேசத்தை சேர்ந்த கேப்டன் அதுல் சர்மா, சுதீர்குமார் மற்றும்  பல்வீந்தர் சிங், வியாஸ் யாதவ் உள்ளிட்ட நான்கு இந்தியர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக அவர்கள் இந்திய தூதரகத்துக்கு தகவல் கொடுத்தனர். மேலும், வெளியுறவு துறை அமைச்சகத்துக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டார். சிறை பிடிக்கப்பட்டுள்ள இந்தியர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இந்நிலையில், நைஜீரியாவில் சிறை பிடிக்கப்பட்ட நான்கு இந்தியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், நைஜீரியாவில் சிறை பிடிக்கப்பட்ட 4 இந்தியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்காக உரிய நடவடிக்கை எடுத்த இதிய தூதரக அதிகாரி ரெட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக பணிசெய்து உதவிய நைஜீரிய அதிகாரிகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்