Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

பர்வேஸ் முஷாரப் வெளிநாட்டில் பதுங்கி வாழும் மிகப் பெரிய கோழை: நவாஸ் செரீப்

Posted On : December 30, 2017

தன் மீது சுமத்தப்பட்டுள்ள கிரிமினல் குற்ற வழக்குகளை சந்திக்க திராணி இல்லாமல் வெளிநாட்டில் சென்று பதுங்கி வாழும் பர்வேஸ் முஷாரப் மிகப் பெரிய கோழை என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

லாகூர்:

தன் மீது சுமத்தப்பட்டுள்ள கிரிமினல் குற்ற வழக்குகளை சந்திக்க திராணி இல்லாமல் வெளிநாட்டில் சென்று பதுங்கி வாழும் பர்வேஸ் முஷாரப் மிகப் பெரிய கோழை என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (75). 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்த முஷாரப் அந்நாட்டில் நெருக்கடி நிலையை பிரகனப்படுத்தியும், நீதிபதிகளை காவலில் வைத்தும் உத்தரவிட்டார். இதனால் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், நீதிமன்ற விசாரணையை அவர் பாகிஸ்தானில் தங்கி எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், தனது உடல் நிலையைக் காரணம் காட்டி அரசிடம் அனுமதி பெற்று முஷாரப் வெளிநாடு சென்றுவிட்டார். தற்போது வெளிநாட்டில் தங்கியிருந்து அவ்வப்போது பேட்டி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள கிரிமினல் குற்ற வழக்குகளை சந்திக்க திராணி இல்லாமல் வெளிநாட்டில் சென்று பதுங்கி வாழும் பர்வேஸ் முஷாரப் ஒரு மிகப் பெரிய கோழை என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாகிஸ்தானில் தன் மீதுள்ள ஏராளமான கிரிமினல் குற்ற வழக்குகளை சந்திக்க திராணி இல்லாமல், கோர்ட் தீர்ப்பில் மரண தண்டனை கிடைத்துவிடும் என அஞ்சியே வெளிநாடு தப்பிச் சென்று துபாயில் பதுங்கி இருக்கிறார். துபாயில் பதுங்கி வாழும் முஷாரப் ஒரு மிகப் பெரிய கோழை, அவரை நீதி முன்பாக கொண்டுவந்து நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ, பர்வேஸ் முஷாரப் தனது தாயை கொன்ற குற்றவாளி என சமீபத்தில் கூறியிருந்த நிலையில் நவாஸ் செரீப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்