Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

மண்எண்ணெய் மானியம் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை

Posted On : December 30, 2017

பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேசன் கடைகளில் மண்எண்ணைக்கான மானியத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை:

பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேசன் கடைகளில் மண்எண்ணெய் வழங்கப்படுகிறது. மாதம் ஒன்றுக்கு ஒரு கார்டுக்கு 3 லிட்டர் வழங்கப்படுகிறது.

சமையல் எரிவாயு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாட்டில் மண்எண்ணெயை எரிபொருளாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. இதனால் இதற்கான ஒதுக்கீட்டையும், மானியத்தையும் குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ் நாட்டுக்கு வழங்கப்படும் மண்எண்ணெய் ஒதுக்கீடு 40 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. 2015-ம் ஆண்டில் 3 லட்சத்து 41 ஆயிரத்து 724 லிட்டர் மண்எண்ணெய் வழங்கப்பட்டது. 2016-17-ம் ஆண்டில் அது 3 லட்சத்து 7 ஆயிரத்து 560 லிட்டராக குறைக்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் அதாவது 2017-18-ல் இது 2 லட்சத்து 4 ஆயிரத்து 528 லிட்டராக வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லி மேல்சபையில் அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் கேள்விக்கு அளித்த பதிலில் மத்திய மந்திரி சி.ஆர். சவுத்ரி இதை தெரிவித்தார்.

2010-ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு 7 லட்சத்து 17 ஆயிரத்து 360 லிட்டர் மண்எண்ணெயை தமிழக அரசுக்கு வழங்கி இருந்தது. கடந்த 7 ஆண்டில் இது 2 லட்சம் லிட்டராக குறைக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கணக்கின்படி மாநில அரசுக்கு ஆண்டுதோறும் 7 லட்சத்து 8 ஆயிரம் லிட்டர் மண்எண்ணெய் தேவையாக இருக்கிறது.

இதேபோல மண்எண்ணைக்கான மானியமும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 2015-16-ம் ஆண்டில் லிட்டருக்கு ரூ.13.47 ஆக மானியம் இருந்தது. இது 2017-18 முதல் காலாண்டில் ரூ.8.79 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2016-17-ல் மானியம் லிட்டருக்கு ரூ.11.39 ஆக இருந்தது.

மண்எண்ணைக்கு வழங்கப்படும் மானியத்தை 2002-ம் ஆண்டில் முழுவதும் ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்