Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

மது அருந்தினால் மெட்ரோ ரெயிலில் அனுமதி இல்லை

Posted On : December 30, 2017
சென்னை:

புத்தாண்டு கொண்டாடுவதற்கு வசதியாக மெட்ரோ ரெயில் சேவையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. புத்தாண்டிற்காக நாளை (31-ந்தேதி) நள்ளிரவு 12.30 மணிவரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மெட்ரோ ரெயிலில் மது அருந்திவிட்டு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மது அருந்தியவர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தாலே பாதுகாவலர்கள் மூலம் வெளியேற்றப்படுவார்கள் என்று மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் எடுப்பதற்கு முன்பே மது போதையில் வருபவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் பாதுகாப்பு கருதி பயணம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று கொண்டாடும் விதமாக நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு வீடு திரும்பவும், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து மகிழ்விக்கவும் நள்ளிரவு வரை சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

நேரு பூங்கா முதல் விமான நிலையம் வரை தற்போது மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது. அதுபோல சின்னமலையில் இருந்து விமானம் நிலையம் வரையிலும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்