Home / உலகம் / தொழில்நுட்பம் /

ரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்

Posted On : December 30, 2017

புதுடெல்லி:

மோட்டோரோலா மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1000 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்ட்ட மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனினை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் ஆன்லைன் மட்டுமின்றி மோட்டோ ஹப்களிலும் வாடிக்கையாளர்கள் வாங்கிட முடியும்.

மோட்டோரோலா மோட்டோ ஜி5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடலாக பல்வேறு புதிய அம்சங்களுடன் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி5எஸ் பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 5.5 இன்ச் 1080×1920 பிக்சல் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
– 13 + 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
– 4ஜி எல்டிஇ, ப்ளூடூத்
– ஜிபிஎஸ், வைபை
– 3.5 எம்எம் ஆடியோஜாக்
– 3000 எம்ஏஎச் பேட்டரி
– டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனிலும் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் லூனார் கிரே மற்றும் பிளஷ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.16,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்