Home / உலகம் / தொழில்நுட்பம் /

2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்

Posted On : December 30, 2017

ஸ்மார்ட்போன் சந்தையில் 2017-ம் ஆண்டு வெளியான ஸ்மார்ட்போன்களில் தலைசிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் டாப் 5 பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.புதுடெல்லி:

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2017-ம் ஆண்டு பல்வேறு புதுவரவு சாதனங்கள் மட்டுமின்றி புதிய தொழில்நுட்பங்களும் வெளியிடப்பட்டன.

பட்ஜெட் விலையில் துவங்கி, ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வரை புதிய தொழில்நுட்பங்கள் பாரபட்சமின்றி பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டது. புதுவரவு நிறுவனங்கள் பட்டியல் ஒரு பக்கம் அதிகரித்த நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தன் பங்கிற்கு அதிகப்படியான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வந்தன.

ஆண்டு இறுதியில் பல்வேறு தள்ளுபடி மற்றும் சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு வெளியிடப்பட்டதில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பார்ப்போம்.சியோமி Mi A1:

இந்தியாவில் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படும் சியோமி Mi A1 ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா, கூகுள் ஸ்டாக் ஆண்ட்ராய்டு உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இத்துடன் Mi A1 ஸ்மார்ட்போனின் சிவப்பு நிற பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.14,999 விலையில் வெளியிடப்பட்டாலும், சமீபத்தில் இதன் விலையில் ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

– 5.5 இன்ச் ஃபுல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டாகோர் பிராசஸர்
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– 12 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– Mi Ui சார்ந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு 7.1.1
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3080 எம்ஏஎச் பேட்டரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– கைரேகை ஸ்கேனர் ஹானர் 7X:

இந்தியாவில் ரூ.12,999 முதல் துவங்கும் ஹானர் 7X ஸ்மார்ட்போனில் 18:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம், டூயல் லென்ஸ் பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ள ஹானர் 7X ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

– 5.93 இன்ச் ஃபுல் எச்டி, 1080×2160 பிக்சல் வளைந்த டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 3659 பிராசஸர்
– 4 ஜிபி ரேம்
– 32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 16 எம்பி + 16 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– 3340 எம்ஏஎச் பேட்டரி

முழுமையான மெட்டல் வடிவைப்பு கொண்ட புதிய ஹானர் 7X ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் சார்ந்த EMUI 5.1 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் பின்புறம் கைரேகை ஸ்கேனர் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. சியோமி ரெட்மி நோட் 4:

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் முதன்மை இடம் பிடித்துள்ள ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 முதல் துவங்குகிறது. அதிக விற்பனையை தொடர்ந்து ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் லேக் புளூ நிற மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

சிறப்பம்சங்கள்:

– 5.5 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் எல்சிடி டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி பிரைமரி கேமரா
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ சார்ந்த MIUI 8
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4100 எம்ஏஎச் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் கொண்ட மாடல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதிகளவு விற்பனையை தொடர்ந்து தற்சமயம் 3ஜிபி மற்றும் 4ஜிபி மாடல்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.சியோமி ரெட்மி நோட் 4:

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் முதன்மை இடம் பிடித்துள்ள ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 முதல் துவங்குகிறது. அதிக விற்பனையை தொடர்ந்து ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் லேக் புளூ நிற மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

சிறப்பம்சங்கள்:

– 5.5 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் எல்சிடி டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி பிரைமரி கேமரா
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ சார்ந்த MIUI 8
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4100 எம்ஏஎச் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் கொண்ட மாடல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதிகளவு விற்பனையை தொடர்ந்து தற்சமயம் 3ஜிபி மற்றும் 4ஜிபி மாடல்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.லெனோவோ K8 நோட்:

இந்தியாவில் ஆகஸ்டு மாதம் அறிமுகம் செய்யப்பட்ட லெனோவோ K8 நோட் ஸ்மார்ட்போன் 5.50 இன்ச் டிஸ்ப்ளே, 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. லெனோவோ K8 நோட் ல்மார்ட்போன் விலை ரூ.13,999 முதல் துவங்குகிறது.

சிறப்பம்சங்கள்:

– 5.5 இன்ச், 1080×1920 பிக்சல் டிஸ்ப்ளே
– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ X23 பிராசஸர்
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– 13 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா
– 13 எம்பி செல்ஃபி கேமரா
– ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
– 4000 எம்ஏஎச் பேட்டரி
– டர்போ சார்ஜ்
– டூயல் சிம் ஸ்லாட்

இரண்டு வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் லெனோவோ K8 நோட் ஸ்மார்ட்போன் விலை ரூ.11,999 முதல் துவங்குகிறது. பின்புறம் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ள லெனோவோ K8 நோட் ஸ்மார்ட்போன் 0.3 நொடிகளில் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும் வசதியை கொண்டுள்ளது. 

Comments

தொடர்புடைய செய்திகள்