பொது நலவாய நாடுகளின் மாநாட்டால் ஈழத்தமிழர்களுக்கு பயனில்லை: சிவாஜிலிங்கம்

sivajilinkamஈழத்தமிழ் மக்களுக்கு எந்தவகையிலும் பயன்தராத பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டை இலங்கையில் ஏற்பாடு செய்துள்ளமையானது, அர்த்தமில்லாத செயற்பாடு என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படவுள்ள இந்த சர்வதேச மாநாடு காரணமாக தமிழர்களுக்கோ ஏனைய பாதிக்கப்பட்ட மக்களுக்கோ எந்த தீர்வினையும் பெற்றுத் தரப் போவதில்லை.

இலங்கையில் இடம்பெற்ற பிரச்சினைகள் தொடர்பில் அந்த மாநாட்டில் ஆராயப்படப் போவதும் இல்லை. கொழும்பு அரச நிர்வாகிகள் தமிழர்களின் நிலைமை தொடர்பாக சர்வதேச தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள் என்பதும் சந்தேகம்.

இவ்வாறான தருணத்தில் அந்த மாநாட்டினால் இலங்கை மக்களுக்கு எந்த நம்மையும் பயக்கப் போவதில்லை.

எனவே இதனை இலங்கையில் நடத்துவதை விட வேறேதும் மக்களின் நலனின் அக்கறை செலுத்தும் அரசாங்கத்தைக் கொண்ட நாட்டில் நடத்துவது பயனள்ளதாக இருக்கும் என்று என்று சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

630 total views, 2 views today

Related Posts

Leave a comment

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>